பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றினடிப்படையில் 73 மாணவர்கள் சித்தியடைந்து, க.பொ.த. உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.

இவர்களில் அதி சிறந்த பெறுபேற்றுக்களை தங்கவேல் ஹரிபிரசாந் 8 ஏ. 1 பி, சுரேந்திரன் கோகுல் 8 ஏ. 1 பி, இளங்கோவன் வித்தியானந் லக்சுமிகாந் 8 ஏ. 1 பி, ஜோவின் நிரோஷன் 8 ஏ. 1 பி ஆகியோரும் கலாநந்தன் கவின் கிர்ஷாந் 5 ஏ. 4 பி, சிவகுமார் விதூஸ்கன் 3 ஏ. 6 பி, விஸ்வராஜா யுவராஜா 3 ஏ. 3 பி. 3 சி, மொஹமட் ஜாவிட் 4 ஏ. 4 பி. 1 சி, மோசஸ் அபிஷேக் 4 ஏ. 2 பி. 3 சி, சந்திரசேகரன் அருண் அபிலாஷ் 3 ஏ. 3 பி, ஜெயானந்தன் கபிஷேக் 3 ஏ. 3 பி. 3 சி என்ற வகையில் 73 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர். இவர்களில் ஜோவின் நிரோஷன் ஆங்கில மொழி மூலம் தோற்றி 8 ஏ. 1 பி என்ற வகையில் சித்தியடைந்துள்ளனர்.

கல்லூரி அதிபர் கே. திருலோகச்சங்கர், மேற்படி சித்தி குறித்து கருத்து தெரிவிக்கையில்,

“எனது தலைமையிலான ஆசிரிய குழாமினர் மேற்கொண்ட அர்ப்பணிப்பான சேவையின் நிமித்தம் மாணவர்கள் பொறுப்பை உணர்ந்து செயற்பட்டனர். மாணவர்கள் தங்கி படிப்பதற்கும், செயலமர்வுகளில் கலந்துகொள்ள வசதிகளை ஏற்படுத்தும் பொருட்டு, கல்லூரி அருகாமையிலேயே தங்குவதற்கு ஏற்பாடுகளை செய்து கொடுத்திருந்தோம்.

கடந்த 2018ம் வருடம் 58 வீத பெறுபேற்றுக்களைப் பெற்றிருந்த நாம் இவ்வருடம் 72 வீத பெறுபேற்றுக்களைப் பெற்று சாதனைகளை ஏற்படுத்தியுள்ளோம். ஊவாவின் தமிழ்ப் பாடசாலைகளைப் பொறுத்தவரையில் எமது கல்லூரி முன்னணியில் இருந்து வருகின்றது.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றுக்களைப் பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் எமது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று கூறினார்.