ஊரடங்கு வேளையில் முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத கட்டுமானங்களை நிறுத்தியது மன்னார் நகர சபை

Published By: Digital Desk 3

29 Apr, 2020 | 03:55 PM
image

மன்னார் நகர சபை பிரிவில் ஊரடங்குச் சட்ட நிலைமையை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வந்த சட்ட விரோத கட்டுமான பணிகளை மன்னார் நகர சபை இடை நிறுத்தியுள்ளது.

மன்னார் நகர சபைக்கு  உற்பட்ட மூர்வீதி பகுதியில் உள்ள  கற்றல் வள நிலையத்திற்கு அருகாமையில் உள்ள  பகுதியில் நகர சபையிடம் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் பல வருடங்களாக மன்னார் நகர சபையால் நிர்மாணப்பணிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிர்மாண பணியானது ஊரடங்கு சட்டத்தை பயன்படுத்தி மீண்டும் அமைக்கப்பட்ட நிலையில் மக்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில்  நகர சபை குறித்த கட்டுமான பணியை உடனடியாக நிறுத்தியுள்ளது.

இருப்பினும் சில நாட்களாக இடம் பெற்ற கட்டுமான வேலையானது போக்குவரத்துக்கு  இடைஞ்சலாக  இருப்பதாகவும் அரச தொடர்பாடல் மின் கம்பம் ஒன்றையும் அக்காணிக்குள் வைத்து சுற்று மதில் எழுப்பப்பட்டுள்ளதாகவும்  அப்பகுதிகளில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளதனால்  ஏற்கனவே கட்டப்பட்ட கட்டுமான பகுதிகளை முழுவதுமாக இடித்து அப்புறப்படுத்தி தருமாறு மூர் வீதி பொது மக்கள் நகர சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதே நேரத்தில் குறித்த கட்டுமாண பனியுடன் தொடர்பு பட்ட நபர் அதே  பகுதியில் இன்னும் ஒரு கட்டுமானப்  பணியில் தொழிலாளர்களை ஈடுபடுத்தியுள்ளதாகவும் ஆனாலும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சுகாதார நடை முறைகளை பின் பற்றாமல்    உரிய அனுமதி பெறாமலும் கட்டுமான பணியில் ஈடுபடுவதாகவும் அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

எனவே குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரி உடனடியாக கவனம் செலுத்தி கட்டுமான பணிகளை நிறுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த பணியினை முன்னெடுப்பவர் கல்வி துறையில் கடமையாற்றும் அதிகாரியும்,சமாதான நீதவானகவும் உள்ள நிலையில் சட்ட விரோத செயல்பாடு குறித்து பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இவ்விடையம் தொடர்பாக மன்னார் நகர சபை தலைவரை வினவிய போது, மன்னார் நகர சபையிடம் எவ்வித அனுமதியும் பெற்றுக்கொள்ளாமல் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கட்டுமானப் பணிக்கு  மன்னார் நகர சபை தடை விதித்துள்ளது என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பேராசிரியர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் வடக்கு, கிழக்கு...

2023-05-29 17:42:27
news-image

புத்தசாசனத்துக்கு பாதிப்பெனக் குறிப்பிட்டு உண்மை பிரச்சினைகளை...

2023-05-29 15:42:48
news-image

புத்தசாசனத்தை அவமதித்து சமூக வலைத்தளங்களில் பிரபல்யமடையும்...

2023-05-29 14:35:56
news-image

அருவக்காலு குப்பைகளை இறக்குதல், ஏற்றுதல், குப்பைகளை...

2023-05-29 17:37:32
news-image

இந்திய அரசாங்கம் நட்டஈடு கோரியதாக எந்த...

2023-05-29 12:59:56
news-image

பாணந்துறையில் இரண்டு மாடி வீட்டிலிருந்து சடலம்...

2023-05-29 17:28:53
news-image

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கையாளுதல் குறித்து அரச...

2023-05-29 17:35:29
news-image

கிளிநொச்சி, நுவரெலியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பில் உணவுபாதுகாப்பின்மை...

2023-05-29 17:43:41
news-image

ஒரு கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் கொள்ளை...

2023-05-29 16:40:54
news-image

யாழ்.நகரில் விடுதியில் தங்கி இருந்த இரு...

2023-05-29 16:28:23
news-image

சம்மாந்துறைக்கும் சோமாவதிக்கும் சென்ற இரு வேன்கள்...

2023-05-29 16:17:42
news-image

கைதான இராஜாங்கனை சத்தாரத்ன தேரருக்கு விளக்கமறியல்

2023-05-29 16:12:12