இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் 43 ஆவது நினைவு தினம் இன்று (29) மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா சதுர்க்கத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான  ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரான நடராசா இலங்கை தமிழரசுக்கட்சியின் வடகிழக்கு மாகாண இளைஞர் அணி தலைவர் சேயோன், தழிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் சாணக்கியன் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது தந்தை செல்வாவின் சிலைக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இறுதியாக இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் ஆத்மசாந்திக்காக இரண்டு நிமிடங்கள் மௌன இறைவணக்கம் செலுத்தப்பட்டது. 

பலத்த பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில், சமூக இடைவெளியினை பேணியவாறாக, குறிப்பிட்ட சில தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களின் பங்கேற்புடன் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.