சட்டவிரோதமான முறையில் ஆடுகளை இறைச்சி ஆக்கினர் என்ற குற்றச்சாட்டில் 4 பேர் கோப்பாய் பொலிஸாரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் கோண்டாவில் நாராயணன் கோவில் பகுதியில் இரண்டு ஆடுகள் சட்ட விரோதமான முறையில் இறைச்சியாக்கப்படுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.இதனையடுத்து கோப்பாய் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் கோண்டாவில் நாராயணன் கோயில் பகுதியிலிருந்து இரண்டு ஆடுகளை இறைச்சியாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 4 பேரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கைகளை எடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.