அங்கவீனமடைந்த, சிகிச்சை பெறும், தேசிய விளையாட்டு அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் விடுமுறையில் உள்ள இராணுவ வீரர்களை அவர்களது வீட்டில் தங்க அனுமதிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான அடிப்படையில் அவர்களை வீட்டில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முப்படையினரின் சொந்த விடுமுறைகள் மறுஅறிவித்தல் வரை ஏப்ரல் 26 ஆம் திகதியில் இருந்து ரத்து செய்யப்பட்டுள்ளன. 

மேலும் விடுமுறையிலுள்ள அனைவரும் முகாம்கள் மற்றும் படைத் தளங்களுக்கு சென்று அறிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை கடற்படையினர் மத்தியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை அடையாளங்காணும் நடவடிக்கை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இவர்களினால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இவர்களைச் சார்ந்த குடியிருப்பாளர்கள் மற்றும் அயலவர்கள் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங் தெரிவித்தார்.

இருப்பினும் கடற்படையினருடன் நெருக்கமான தொடர்புகளைக்கொண்டிருந்தவர்களுக்கு வைரஸ் தொற்று தொடர்பிலான விடயத்தில் சுகாதார மற்றும் புலனாய்வுப்பிரிவினார் கவனம் செலுத்திவருவதாவும் அவர் கூறினார்.