கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த வைத்தியர் தற்கொலை - நியூயோர்க்கில் சம்பவம்

Published By: Digital Desk 3

29 Apr, 2020 | 12:57 PM
image

அமெரிக்காவில் நியூயோர்க் நகரித்திலுள்ள பிரிஸ்பைடேரியன் வைத்தியசாலையில் கொரோனா அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய லோர்னா பிரீன் என்ற பெண் வைத்தியர் தற்கொலை செய்து கொண்டமை அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிறன்று குறித்த வைத்தியர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கத்திற்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 59 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் நியூயோர்க்கில் மாத்திரம் 17,500 பேர் கொரோனாவுக்குப் உயிரிழந்துள்ளனர்.

லோர்னா பிரீன் கொரோனாவினால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு குணமடைந்து மீண்டும் மருத்துவப் பணிக்கு திரும்பியவர்.

தானும் பிற வைத்தியர்களும் கஷ்டப்பட்டுப் போராடியும் நோயாளிகளைக் காப்பாற்ற முடியாமல் கண்ணெதிரே அவர்கள் உயிர்பிரிவதை தன்னால் தாங்க முடியவில்லை என்று அவர் பல முறை கூறியதாக அவரது தந்தை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இவரது வேதனையைப் புரிந்து கொண்ட வைத்தியசாலை நிர்வாகம் இவரை வீட்டுக்குச் செல்லுமாறு கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்நிலையில் தனது தாயார் மற்றும் சகோதரியுடன் வாழ்ந்து வந்த தற்கொலை செய்துகொண்ட வைத்தியர், தொடர்ந்து மன வேதனையில் இருந்ததாகவும் எவருடனும் பேசாமல் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நியூயோர்க்கில் வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் கடும் கொரோனா தொற்று அதிகரிப்பையடுத்து அவதிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர்.

இதேவேளை, ஒவ்வொரு ஆண்டும் 300 வைத்தியர்கள் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட வைத்தியர் லோர்னாவுக்கு மதிப்பளிக்குமாறு அவரது தந்தை கேட்டுக் கொண்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52