கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட பணியற்ற காலப்பகுதியை மே 11 திகதி வரை நீடிப்பதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தீர்மானித்துள்ளார்.
சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் பிராந்தியத் தலைவர்களுடன் இன்று இடம்பெற்ற காணொளி உரையாடலின்போதே இந்த அறிவிப்பினை புட்டின் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாத இறுதியில் ரஷ்யாவில் கொரோனா பரவலுக்கு எதிராக அமுல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்படவிருந்தன.
எனினும் கொரோனாவின் தொடர் பரவல் நிலை காரணமாக கட்டுப்பாடுகளானது தொடர்ந்தும் அமுலில் உள்ளது.
இந் நிலையில் பொருளாதாரம் மற்றும் குடி மக்களின் நலனை கருத்திற்கொண்டு மே 5 ஆம் திகதிக்குள் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான பூட்டல் கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ரஷ்யாவில் பணியற்ற காலப் பகுதி மே மாதம் 11 ஆம் திகதி வரையும் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் புட்டின் அறிவித்துள்ளார்.
ரஷ்யாவில் இதுவரை 93,558 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதனால் 867 உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM