பிரிட்டனின் தேசிய சுகாதார சேவைக்கு நிதி திரட்டுவதற்காக தனது வீட்டில் இருக்கும் 25 மீட்டர் நீள தோட்டத்தில் 100 தடவை நடந்து, நன்கொடை திரட்டிய பிரிட்டிஷ் போர் வீரரான டோம் மூருக்கு 125,000 க்கும் மேற்பட்ட பிறந்தநாள் வாழ்த்து அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளன.

இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற கேப்டன் டோம் மூர் வியாழக்கிழமை தனது 100 ஆவது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார்.

இந் நிலையிலேயே அவரை வாழ்த்துவதற்கும், கெளரவப்படுத்துவதற்கும் இவ்வாறு பிறந்த நாள் அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

டோம் மூர் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்துக்கு உதவும் வகையில் பிரிட்டனின் தேசிய சுகாதார சேவைக்காக இதுவரையில் 36 மில்லியன் ‍அமெரிக்க டொலர்களை நன்கொடையாக திரட்டியுள்ளார்.

டோம் மூர் இரண்டாம் உலகப்போர் காலத்தில் இந்தியாவில் பணியாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Photo Credit : twitter