இலங்கையில் ''கொவிட் 19'' ற்கான புதிய இணையத்தளம் அறிமுகம்

Published By: J.G.Stephan

28 Apr, 2020 | 07:49 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையின் கொவிட் 19 வைரஸ் நோய் தொடர்பாக தகவல்களை வெளிப்படுத்தும் www.covid19.gov.lk இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் ICTA மூலம் இந்த இணையத்தளம் செயற்படுத்தப்படுகின்றது.

கொவிட் 19 தொடர்பாக இலங்கையின் தகவல்களை ஒரே மேடையில் முன்னெடுக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த இணையதளத்தின் மூலம் ஜனாதிபதி செயலகம், சுகாதார மேம்பாட்டு அலுவலகம், கொவிட் 19 தொற்று பரவுவதை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம், அரசாங்க தகவல் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சு ஆகிய நிறுவனங்களின் மூலம் பெறப்படும் தகவல்கள் இதில் உள்ளடக்கப்படுகின்றன.

கொவிட் 19 பரவுவதை தடுக்கும் அனைத்து தகவல்கள் மற்றும் செயற்பாடுகள், கண்டுபிடிப்புகள் தொடர்பான தகவல்களின் கேந்திர நிலையமாக இந்த இணையதளம் செயற்படுவதுடன் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் சமீபத்திய புதுப்பிப்புகளுடன் துல்லியமான தகவல்களை தடையின்றி பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், தொற்று நிலைமைக்கு மத்தியில் இந்த இணையதளம் சுகாதாரத்திற்கான தகவல்கள் உள்ளடக்கிய ஆவணங்களை மாத்திரம் வரையறுக்காது பொருளாதாரம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, சுற்றுலா, போக்குவரத்து அத்தியாவசிய பொருட்களை விநியோகித்தல், சமூக சேமநலம், சட்டம் மற்றும் சமாதானம், பாதுகாப்பு போன்ற பல தகவல்களை அறிந்துகொள்ளக்கூடியதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக பிள்ளையான் உறுதியளித்தார்...

2024-06-22 22:11:18
news-image

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2024-06-22 22:22:37
news-image

அரசாங்கமும் எதிர்க்கட்சியிலுள்ள வேலையாற்றத் தெரியாத கட்சியும்...

2024-06-22 16:47:00
news-image

போதைப்பொருட்களுடன் 536 பேர் கைது

2024-06-22 22:12:51
news-image

இரண்டு முச்சக்கரவண்டிகள் மோதி விபத்து ;...

2024-06-22 22:21:27
news-image

தமிழ் அரசியல் தலைவர்களின் நிலைப்பாடுகளை இந்திய...

2024-06-22 16:58:15
news-image

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த கொழும்புவாசி கைது...

2024-06-22 18:26:32
news-image

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த வாழைத்தோட்டம்...

2024-06-22 16:49:56
news-image

நோயாளியின் மோதிரம், சிறுதொகைப் பணம், கைப்பை...

2024-06-22 18:49:06
news-image

திருகோணமலையை வந்தடைந்தது இந்திய கடற்படையின் கமோர்டா...

2024-06-22 22:24:50
news-image

காட்டு யானைகளின் அட்டகாசத்தால் பயிர்கள், உடைமைகளை...

2024-06-22 16:55:38
news-image

பதுளையில் மோட்டார் சைக்கிள் விபத்து ;...

2024-06-22 16:51:52