அமெரிக்காவின் வெர்ஜினியாவில் வரலாறு காணாத கனமழை பெய்ததினால் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதை தொடர்ந்து வெர்ஜினியாவில் 44 பகுதிகளுக்கு அவசர காலநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

எல்க் ஆற்றின் நீர்மட்டம் கடந்த 1888 ஆம் ஆண்டுக்கு பின்னர் 32 அடியாக உயர்ந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

வீடுகளை சுற்றி வெள்ளம் தேங்கி நிற்பதால் அங்கு சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணியில் 200 தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.