பெய்ஜிங், ( சின்ஹுவா ) 140 கோடிக்கும் அதிகமான சனத்தொகையைக் கொண்ட சீனாவில் இணையத்தைப் பயன்படுத்துவோரின் ( நெற்றிசன்) எண்ணிக்கை இவ்வருடம் மார்ச் மாதம் அளவில் சுமார் 90 கோடி 40 இலட்சமாக இருப்பதாக செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட சீன இணைய வளர்ச்சி பற்றிய அறிக்கையின் மூலம் தெரியவந்திருக்கிறது.

2018 முடிவில் இருந்த எண்ணிக்கையில் இருந்து இது 7 கோடி 50 இலட்சத்து 80 ஆயிரத்தினால் அதிகரித்திருக்கிறது.

சீனாவில் இணையப் பயன்பாடு 64,5 சதவீதத்தை எட்டியிருக்கிறது.2018 இறுதி அளவில் இருந்ததை விடவும் இது 4.9 சதவீத அதிகரிப்பாகும் என்று சீன இணைய வலையமைப்பு தகவல் நிலையத்தினால் வெளியிடப்பட்ட அந்த அறிக்கை கூறுகிறது.

சீனாவில் கையடக்கத்தொலைபேசி ஊடாக இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 2018 இறுதியில் இருந்து 7 கோடி 99 இலட்சத்து 20 ஆயிரத்தினால் அதிகரித்து 2020 மார்ச்சில் 89 கோடி 70 இலட்சத்தை எட்டியிருக்கிறது.சீனாவில் மொத்த நெற்றிசன்களின் எண்ணிக்கையில் இவர்கள் 99.3 சதவீதத்தினராவர் என்றும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.