யாழ்.குடாநாட்டில் பாதுகாப்பு தேவைக்குரிய காணிகளைத் தவிர ஏனைய காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படுமென பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

குடநாட்டில் மூவாயிரம் ஏக்கர் காணிகளே தற்போது படையினர் வசம் உள்ளதாக குறிப்பிட்ட அவர் 2018ஆம் ஆண்டுக்குள் காணிவிடுவிப்பு செயற்பாடுகள் நிறைவடையும் எனவும் உறுதிபடத்தெரிவித்தார்.

யாழ்குடாநாட்டில் படையினர் வசமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளின் உறுதிப்பத்திரங்களை மக்களிடத்தில் கையளிக்கும் நிகழ்வு இன்று (25) காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர்  ஊடகவியலாளர்களை சந்தித்த பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.