(எம்.மனோசித்ரா)

காய்ச்சல், இரத்தப்போக்கு , கடுமையான தலைவலி , சுவாசிப்பதில் சிரமம், பார்வை குறைபாடு , வலிப்பு (குசைள) , நெஞ்சுவலி , வயிற்றுவலி , சிசுவின் அசைவு குறைதல் உடல் வீக்கம் அல்லது வேறு ஏதேனும் கடுமையான அசௌகரியம் ஏற்பட்டால் கர்ப்பிணிப் பெண்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கர்ப்பிணித் தாய்மாரை பாதிப்புக்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் இன்று செவ்வாய்கிழமை விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்திருக்கும் அவர் அந்த அறிவிப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு தரமான சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும் மருத்துவமனைகளில் நெறிசலைக் குறைப்பதற்காகவும் கிளினிக்குகளில் கலந்து கொள்ளும் கர்ப்பிணிப் பெண்கள் முற்பதிவுகளைப் பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.