பேஸ்புக் நிறுவனத்தின் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனை பெரும்பாலானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த அப்பிளிக்கேஷனை சிறார்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் பாதுகாப்பு வசதிகளை உள்ளடக்கியதாக மெஸ்என்ஜெர் கிட்ஸ் எனும் பெயரில் ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளது.

எனினும் இந்த அப்பிளிக்கேஷன் குறிப்பிட்ட சில நாடுகளில் மாத்திரமே பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது இலங்கை உள்ளிட்ட மேலும் 70 நாடுகளில் இதனை பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 

தற்போது உலகின் பல நாடுகளில் உள்ள லொக்டவுன் நிலைமை காரணமாக சிறார்களுக்கு குறித்த அப்பிளிக்கேஷன் பல்வேறு வழிகளில் பயனுள்ளதாக இருக்கும்.

இதனைக் கருத்திற்கொண்டே மேலும் விஸ்தரிப்பு செய்யப்பட்டுள்ளது.