வவுனியாவில் கொள்ளையிடப்பட்ட பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் மீட்பு : ஐவர் கைது

28 Apr, 2020 | 04:28 PM
image

வவுனியாவில் கொள்ளையிடப்பட்ட 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டதுடன், 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, இறம்பைக்குளம் பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்று கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி மலேசியா சென்றிருந்த நிலையில் வீடு பூட்டப்பட்டிருந்துள்ளது. இதன்போது குறித்த வீட்டினை உடைத்து அங்கு சென்ற கொள்ளையர்கள் தொலைக்காட்சி, சலவை இயந்திரம், மடிக்கணணி, மின்னழுத்தி, வாயு அடுப்பு, சிலிண்டர், அவண், மிக்ஸ்சி, தண்ணீர் பில்டர், கிளாஸ், கரண்டி உள்ளிட்ட சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு கடந்த வாரம் கிடைத்த முறைப்பாட்டையடுத்து வவுனியா பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டதுடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து தேக்கவத்தை, கற்குழி, நெளுக்குளம், மகாறம்பைக்குளம், கோவில்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.

இச்சம்பவம் தொடர்பில் 18 தொடக்கம் 25 வயதிற்குட்பட்ட தேக்கவத்தை, நெளுக்குளம், மகாறம்பைக்குளம் சூசைப்பிள்ளையார்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 5 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னார் துப்பாக்கிச் சூடு ; சந்தேக...

2025-01-18 12:33:20
news-image

யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு “ திருவள்ளுவர்...

2025-01-18 12:44:08
news-image

சந்தோஷ் ஜா யாழ்ப்பாணத்துக்கு விஜயம் -...

2025-01-18 13:18:48
news-image

கிளிநொச்சி நீர் சுத்திகரிப்பு நிலைத்திற்கு அமைச்சர்...

2025-01-18 12:41:29
news-image

குருணாகல் - கொழும்பு பிரதான வீதியில்...

2025-01-18 12:03:28
news-image

நானுஓயாவில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி...

2025-01-18 11:50:50
news-image

திருகோணமலையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின்...

2025-01-18 11:53:22
news-image

மஸ்கெலியாவில் 08 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக...

2025-01-18 11:42:21
news-image

களுத்துறையில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

2025-01-18 11:35:22
news-image

மட்டக்களப்பு வாவியில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

2025-01-18 11:31:04
news-image

முகத்துவாரத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது...

2025-01-18 11:12:51
news-image

25ஆம் திகதி சந்திப்பு முக்கிய திருப்புமுனையின்...

2025-01-18 11:17:23