(இராஐதுரை ஹஷான்)

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களை இனங்காணும் பி.சி.ஆர் பரிசோதனையை  பல்கலைக்கழக மருத்துவ பீடத்துடன் இணைந்து  அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் சுகாதார சேவையாளர்கள், பல்கலைக்கழக உபவேந்தர்களுக்கு இடையிலான சந்திப்பு நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களை அடையாளம் காணும் பி.சி.ஆர் பரிசோதனை தற்போது தெரிவு செய்யப்பட்ட விதத்தில் முன்னெடுக்கப்படுகின்றன. பி.சி.ஆர் பரிசோதனையை பல்கலைக்கழக மருத்துவ பீடங்கள் ஊடாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடம், பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடம், களனி பல்கலைக்கழக மருத்துவ பீடம், மட்டக்களப்பு பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆகிய பல்கலைக்கழகங்கள் ஊடாக பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் நாள் ஒன்றுக்கு  1000 பி.சி.ஆர் பரிசோதனையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.