பரீட்சைகள் திணைக்களத்திற்கு நேரில் வந்து பெறுபேறுகளைப்பெற முடியாது - பிரதி ஆணையாளர் நாயகம்

28 Apr, 2020 | 03:49 PM
image

(இரா.செல்வராஜா)

பிராந்திய பாடசாலை அதிபர்கள் எவரும் பரீட்சைகள் திணைக்களத்துக்கு நேரில் வந்து மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியாது என்று பரீட்சைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் நாயகம் எஸ்.பிரநவதாசன் தெரிவித்தார்.

பிரதி ஆணையாளர் நாயகம் எஸ்.பிரநவதாசன் மேலும் தெரிவித்தாவது,

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் 10 ஆயிரத்து 346 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர். இது 73.84 வீதமாகும் என பரீட்சைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் நாயகம் எஸ்.பிரநவதாசன் தெரிவித்தார்.

கணித பாடத்தில் 66.82 வீதத்தினர் சித்தியடைந்துள்ளனர். கடந்த டிசம்பர் நடைபெற்ற இப் பரீட்சையில் தோற்றுவதற்கு 7 இலட்சத்து 17 ஆயிரத்து 246 பேர் விண்ணப்பித்திருந்தனர். எனினும் 5 இலட்சத்து 56 ஆயிரத்து 256 பேரே பரீட்சைக்குத் தோற்றினர்.

இம்முறை கொழும்பு  பிராந்திய பாடசாலை அதிபர்கள் எவரும் நேரில் திணைக்களத்துக்கு வந்து மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ள முடியாது. அவர்கள் இணையதளம் மூலம் இன்று செவ்வாய்கிழமை அறிந்து கொள்ள முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right