இலங்கைக்கு ஒரு தொகுதி மருத்துவ கையுறைகளை வழங்கிய இந்தியா !

27 Apr, 2020 | 08:26 PM
image

கொவிட் – 19 நோயினை எதிர்கொள்வதற்காக இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் உதவிகளின் தொடர்ச்சியாக ஒரு தொகுதி மருத்துவ கையுறைகள் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் இலங்கை அரசாங்கத்திடம் இன்று  திங்கட்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இம் மாதம் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் 13 தொன்கள் உயிர்காக்கும் அத்தியாவசிய பொருட்கள் இந்தியாவால் இலங்கைக்கு கையளிக்கப்பட்டன.

இது தொடர்பில் இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராயலம் தெரிவித்துள்ளதாவது ,

2மார்ச் 15ஆம் திகதியன்று இடம்பெற்ற சார்க் தலைவர்களின் வீடியோ மாநாட்டின் போது, அயல் நாடுகளின் அவசர உதவி பணியாளர்களுக்கு கொவிட் - 19ஐ கையாள்வதற்கான முயற்சிகளுக்கு உதவுவதற்காக இந்தியா இணைய மூலமான பயிற்சிகளை வழங்கும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், இந்திய வெளியுறவு அமைச்சு, கொவிட் - 19 முகாமைத்துவ உத்திகள் மற்றும் தொடர்புடைய அம்சங்கள் குறித்து சுகாதார நிபுணர்களுக்காக e-ITEC குறுகிய பயிற்சிகளை இணையம் மூலமாக நடத்துகிறது.

அதன் முதலாவது இணைய அமர்வு (Webinar) ' சுகாதார பராமரிப்பு நிபுணர்களுக்கான கொவிட் - 19 தடுப்பு மற்றும் முகாமைத்துவ வழிகாட்டுதல்கள்' என்ற தொனிப்பொருளில் ஏப்ரல் 17 முதல் 21 வரை ராய்ப்பூரில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

அதில் இலங்கை சுகாதார அமைச்சின் 11 மருத்துவ அதிகாரிகள்  பங்கேற்றனர். இரண்டாவது இணையவழி ITEC பயிற்சி ' கொவிட் 19ஐ கையாள்வதில் இந்தியாவின் அனுபவம் மற்றும் சிறந்த நடைமுறைகள்' என்ற தலைப்பில் சண்டிகரில் உள்ள மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான பட்டப்பின் கற்கைகள் நிறுவனத்தால் நேற்று முதல் 2020 மே 1 வரை நடத்தப்படுகிறது. எதிர்வரும் நாட்களிலும் இவ்வாறான பயிற்சிகள் நடைபெறவுள்ளன.

இந்த நெருக்கடியான காலப்பகுதியில் தனது வளங்களையும் நிபுணத்துவத்தையும் அயல்நாடுகளுடனும் நட்புநாடுகளுடனும் தொடர்ந்து பகிர்ந்துகொள்வதற்கு இந்தியா உறுதியாக உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்