பாடசாலைகள் ஏன் கோரப்பட்டன ? - விளக்குகிறார் இராணுவத் தளபதி

By J.G.Stephan

27 Apr, 2020 | 05:44 PM
image

(எம்.மனோசித்ரா)

தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைப்பதற்காக பாடசாலைகள் கேட்டு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்படவில்லை. அனைத்து வீரர்களும் முகாம்களுக்கு அழைக்கப்பட்டுள்ள இந்நிலையில் சுகாதாரத்துறையினரால் வலியுறுத்தப்படுகின்ற சமூக இடைவெளியைப் பேணுவதில் சிக்கல் ஏற்படும் என்பதன் காரணமாக பாதுகாப்புபடையினர் தங்கக் கூடிய முகாம்களை அமைப்பதற்கே சில சிறிய பாடசாலைகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் கோரப்பட்டுள்ளமையானது தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைப்பதற்கு பாடசாலைகள் கோரப்பட்டுள்ளதாக போலிப்பிரசாரங்களும் கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றமை தொடர்பில் விளக்கமளிக்கையில் இதனைத் தெரிவித்த இராணுவத்தளபதி மேலும் கூறுகையில், தமைப்படுத்தல் நிலையங்களை அமைப்பதற்கு எந்த பாடசாலையும் பயன்படுத்தப்படவில்லை என்று உறுதியாகக் கூறுகின்றோம். இவ்விடயம் தொடர்பில் அநாவசியமான கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. என்னிடமும் இது தொடர்பிலும் வினவினர். எந்தவொரு சந்தப்பத்திலும் பாடசாலைகளை தனிமைப்படுத்தல் நிலையங்களாக்க நாம் எதிர்பார்க்கவில்லை.

எனினும் நாம் கடந்த இரு தினங்களில் சிறிய பாடசாலைகள் குறிப்பாக இராணுவ முகாம்களுக்கு அருகில் காணப்படும் சில பாடசாலைகளைத் தருமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றோம். அவ்வாறு வழங்கக் கூடிய பாடசாலை எவை என்பது பற்றி கல்வி அமைச்சர் எமக்கு தெளிவுபடுத்தியுள்ளார். இரு தினங்களில் அனைத்து இராணுவ வீரர்களையும் அழைப்பதற்கு நாம் எதிர்பார்த்தோம். பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவினால் இதற்கான கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள நிலைமையில் சமூக இடைவெளியைப் பேணுவது அத்தியாவசியமானதாகும். எனினும் எம்மால் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் இராணுவ வீரர்கள் தங்கக் கூடிய குறிப்பிட்ட அளவொன்று உள்ளது. சில வீரர்கள் சேவைக்காக வெளியில் சென்றாலும் ஏனைய அனைவரும் முகாம்களிலேயே தங்க வேண்டியுள்ளது.

எனவே சுகாதாரத்துறையினரால் வலியுறுத்தப்படும் சமூக இடைவெளியைப் பேணுவதற்கு எமக்கு முகாம்களை அமைக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. இதற்காக வேறு இடங்களை இனங்காண வேண்டியுள்ளது. அதற்கமைய சில இடங்களில் எம்மால் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அவற்றுக்கு அப்பால் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கக் கூடிய முகாம்கள் காணப்பட்டால் இராணுவ வீரர்களை தங்க வைப்பதற்காக மாத்திரமே எம்மால் சில பாடசாலைகள் கோரப்பட்டுள்ளன. எனவே தனிமைப்படுத்தல் நிலையம் என்பது பாடசாலைகளில் அமைக்கப்பட வேண்டியவையல்ல. இதனை எண்ணி மக்கள் அநாவசிய அச்சம் கொள்ளத் தேவையில்லை.

எம்மால் முகாம்களை அமைக்க முடியாமல் போனாலும் ஒருபோதும் பாடசாலைகளில் தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்க எதிர்பார்க்கவில்லை என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதை தனியார்மயப்படுத்தல் என...

2022-12-08 16:33:06
news-image

ஜனாதிபதி விரும்பினால் அமைச்சரவையில் மாற்றம் -...

2022-12-08 16:30:49
news-image

கூட்டணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார் வேலுகுமார் -...

2022-12-08 22:00:49
news-image

பாடசாலை விடுமுறை குறித்த விசேட அறிவிப்பு 

2022-12-08 21:38:21
news-image

தமிழ் அரசியல் கைதிகளை ஒரே தடவையில்...

2022-12-08 15:23:26
news-image

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது சிறந்த...

2022-12-08 14:58:05
news-image

ஊழல் மோசடி முடிவுக்கு வரும் வரை...

2022-12-08 18:39:48
news-image

அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர்கள் தெரிவு பெரும்பான்மை...

2022-12-08 18:41:55
news-image

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவை கலைத்துவிட வேண்டும் -...

2022-12-08 13:39:41
news-image

6 கோடி ரூபா பெறுமதியான தேங்காய்...

2022-12-08 18:38:26
news-image

2023 ஆம் ஆண்டுக்கான வரவு -...

2022-12-08 19:04:07
news-image

மக்களுக்கு கஷ்டமாக இருந்தாலும் மின் கட்டணத்தை...

2022-12-08 18:17:53