டமாஸ்கஸை நோக்கி இஸ்ரேலிய போர் விமானங்கள் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் குறைந்து மூன்று பொது மக்கள் உயிரிழந்துள்ளதாக சிரியா அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

சிரியாவின் தலைநரான டமாஸ்கஸ்ஸிற்கு அருகிலுள்ள அல்-ஹுஜைரா மற்றும் அல்-அட்லியா நகரங்களில் குடியிருப்பு பகுதிகளிலையே இந்த ஏவுகணைகள் தாக்கியுள்ளது.

இதனால் மூன்று பொது மக்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாகவும் சிரியாவின் அரச செய்தி நிறுவனம் திங்களன்று உறுதிப்படுத்தியுள்ளது.

லெபனான் வான்வெளியிலிருந்து இஸ்ரேலிய போர் விமானங்கள் மேற்கொண்ட இந்த ஏவுகணை தாக்குதலில் பலவற்றை சிரிய பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் கொடுத்து அழித்தும் உள்ளனர்.

2011 ஆம் ஆண்டிலிருந்து சிரியா மற்றும் இஸ்ரேலுக்கிடையில் மோதல் ஆரம்பமாகியதிருந்து இஸ்ரேல் நூற்றுக்கணக்கான தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இஸ்ரேல் கடந்த காலங்களில் சிரியா மீது தாக்குதல்களை நடத்த லெபனானின் வான்வெளியை பயன்படுத்தி வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

Photo Credit : aljazeera