வவுனியா பூந்தோட்டம் பகுதியிலுள்ள நீரோடை ஒன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார்  தெரிவித்தனர்.

குறித்த கண்டுபிடிக்கப்பட்ட சடலம் வவுனியா, திருனாவன்குளம் பகுதியை சேர்ந்த 48 வயுதுடைய ஒருவருடையது என தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லையென தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.