இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு 'கொவிட் 19A' என்ற வகை வைரஸே தொற்றியுள்ளதாக  ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வு குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேற்படி ஆராய்ச்சி தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த பல்கலைக்கழக குழுவிற்கு, டெங்கு ஆய்வு நிலையத்தின் இயக்குனர் பேராசிரியர் நிலிக்கா மலவிகே தலைமை தாங்கியுள்ளார். 

கொவிட் 19 வைரஸை A,B,C ஆகிய மூன்று வகையில் விஞ்ஞானிகள் இனங்கண்டுள்ளனர்.

இந்நிலையில், சீனா- வுஹானில், கொவிட் 19 B வகையே பரவியுள்ளமை தெரியவந்துள்ளது.

அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளை அதிகமாக தாக்கியது, கொவிட் 19 A வகையே என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அந்தவகையில் இலங்கையை தாக்கியுள்ள வைரஸ் வகை 'கொவிட் 19 A' வகையே என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஒரு நாட்டில் பாவனையிலிருக்கும் தடுப்பூசி, இன்னுமொரு  நாட்டிற்கு பொருத்தமானதா என கண்டறிய, அந்நாட்டில் பரவியுள்ள வைரஸின் வகையையே முதலில் அடையாளம் காண வேண்டுமென பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.