சாரதி அனுமதிப்பத்திரமின்றி ஆட்டோவை செலுத்திய பௌத்த பிக்குவிற்கு, பதுளை மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி சம்பிக்க ராஜபக்ச மூவாயிரம் ரூபாவினை அபராதமாக விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

பதுளைப் பகுதியின் ரில்பொல விகாரையின் பௌத்த பிக்குவிற்கே மேற்படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பதுளை - ஸ்பிரிங்வெளி பகுதியில் இடம்பெற்ற ஆட்டோ - கார்  விபத்தினை விசாரணை செய்த பதுளைப் பொலிசார், குறித்த விபத்தில் ஆட்டோவை செலுத்திச் சென்றவர் ஒரு பௌத்த பிக்குவென்றும் அதற்கான சாரதி அனுமதிப்பத்திரம் அவரிடம் இருக்கவில்லையென்றும் பொலிசார் தெரிவித்தனர்.

பதுளை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் செய்யப்பட்ட பௌத்த பிக்கு, தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை ஏற்றுக்கொள்ளவே, நீதிபதி அவருக்கு மூவாயிரம் ரூபாவினை அபராதமாக விதித்து தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.