கொரோனா வைரஸ்  முதன்முதலில் கண்டறியப்பட்ட சீனாவின் ஹூபே மாகாணத்தின் தலைநகர் வுஹானில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைத்து கொரோனா வைரஸ் நோயாளிகளும் மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு (NHC) தெரிவித்துள்ளது.

இந்நிலையில், “ஏப்ரல் 26 க்குள், வுஹானில் புதிய கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக இருந்தது, வுஹான் மற்றும் நாடு முழுவதும் உள்ள மருத்துவ ஊழியர்களின் கூட்டு முயற்சிகளுக்கு நன்றி” என்று தேசிய சுகாதார ஆணைக்குழு செய்தித் தொடர்பாளர் மி ஃபெங் ஒரு மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

இதுவரை வுஹானில் மொத்தம் 46,452 நோய் தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, 3869 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

கொரோனா வைரஸ்  காரணமாக பூட்டப்பட்ட உலகின் முதல் நகரம் வுஹான் ஆகும். பல மாதங்கள் பயம் மற்றும் பதற்றங்களுக்குப் பிறகு, இது மெதுவாக சாதாரண நிலைக்கு திரும்பியுள்ளது.

வைரஸின் முதல் தொற்று டிசம்பர் நடுப்பகுதியில் வுஹானில் கண்டறியப்பட்டன. அடுத்த வாரங்களில், தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தன, ஜனவரி 23 முதல் ஏப்ரல் 8 வரை, சீன அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முயன்றதால் குடியிருப்பாளர்கள் நகரத்தை விட்டு வெளியேற முடியவில்லை.

சீனாவில் கொரோ வைரஸ் தொற்றால் 84,325 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அதில் 77,346 பேர் குணமடைந்துள்ளார்கள். இதுவரை மொத்தமாக 4,642 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

ஆனால் சீனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முயற்சித்த போதிலும், இது இப்போது உலகளவில் 2.6 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்துள்ளது. மேலும் 203,683 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.