சவுதி அரேபியா நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தினை இன்று ஞாயிற்றுக்கிழமை தளர்த்தியுள்ளது.

எனினும் மக்கா நகரத்திலும், முன்னர் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவுகளானது தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக அந் நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி ஊரடங்கு தளர்த்தப்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும்.

அதே நேரத்தில் வர்த்தக நிலையங்கள், மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் ரமழானின் ஆறாவது நாள் முதல் புனித மாதத்தின் 20 ஆவது நாள் வரை அதாவது ஏப்ரல் 29 முதல் மே 13 வரை மீண்டும் திறக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த காலப் பகுதியில் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றவும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் 16,299 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 136 உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Photo Credit : aljazeera