ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை வெளிநாட்டு மதுபான விற்பனை நிலையம் ஒன்றை முற்றுகையிட்ட போது மதுவரித் திணைக்கள அதிகாரிகள் இருவர் தாக்கப்பட்டுள்ளனர்.

ரிகிலகஸ்கட பிரதேசத்தில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இது பற்றி மேலும் தெரிய வருவதாவது.

மேற்படி விற்பனை நிலையத்தில் இருந்த மதுபான போத்தல்களை பிரிதொரு இடத்திற்கு எடுத்துச்செல்ல முயற்சிப்பதாக மது வரித்திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்ததகவலை அடுத்து அவர்கள் அங்கு சென்றபோதே மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

காயமடைந்த இருவரும் கண்டி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி சம்பவத்திற்கு பிரதேச அரசியல் வாதி ஒருவரின் தலையீடு இருக்கலாம் என மத்திய மாகாண மதுவரித்திணைக்கள  பரிசோதகர் ஒருவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.