கொழும்பு, மோதர - அளுத்மாவத்தை பகுதியில் 15 கிலோகிராம் ஹசிஸ் போதைப்பொருள் வைத்திருந்த பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

49 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

கைதுசெய்யப்பட்ட பெண்ணை மாளிகாகந்த  நீதிமன்றத்தில் இன்று (25) ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.