எதிர்வரும் மே மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வூதியம் உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகளும் வழங்கப்படும் என்று நிதியமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி அங்கவீனக் கொடுப்பனவும், சிறு நீரக நோயாளிகளின் கொடுப்பனவு, சமுர்த்தி கொடுப்பனவு, முதியோர்களுக்கான கொடுப்பனவு உள்ளிட்டவற்றை உரிய திகதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதற்கு தேவைாயன நிதியும் திறைசேரியில் உள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆர்டிகல சுட்டிக்காட்டினார்.

இதனிடையே ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டு  வரும் மாவட்டங்களில் தபால் நிலையங்களை மீண்டும் திறப்பது தொடர்பாக நாளை ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

தபால் நிலையங்களை மீண்டும் திறப்பது தொடர்பான அத்தியாவசிய சேவைகள் குறித்த விவரங்களை தபால் துறை ஜனாதிபதி பணிக்குழு முன் தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.