60 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் பாகிஸ்தான் பிரஜையொருவர் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட 30 வயதுடைய பாகிஸ்தான் பிரஜையிடமிருந்து 5 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

டோஹாவில் இருந்து கட்டுநாயக்க விமானநிலையத்தை நோக்கி வந்த விமானத்திலேயே குறித்த பாகிஸ்தான் பிரஜை பயணித்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.