கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இலங்கையைச் சேர்ந்த மாணவர்கள் கொண்ட குழுவொன்று இன்று நாடு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் கோயம்புத்தூரில் உள்ள ஒழு குழு மாணவர்களே இன்று மாலை நாடு திரும்பவுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

லாகூர், கராச்சி, அமிர்தசரஸ், காத்மாண்டு மற்றும் மும்பையைச் சேர்ந்த 453 மாணவர்கள் இதுவரை நாடு திரும்பியுள்ளனர்.

நாட்டிற்கு வரும் அனைத்து மாணவர்களையும் சுகாதார அமைச்சின் ஆலோசனைகளுடன் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களுக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பங்களாதேஷின் டாக்கா, இந்தியாவின் பெங்களூர் ஆகிய பகுதிகளிலிருந்து செவ்வாய்க்கிழமை மாற்றொரு தொகுதி மாணவர்களும் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

குறித்த நாடுகளின் அனுமதியுடன் சிறப்பு விமானங்கள் மூலமாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் இவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.