பற்சிகிச்சையில் உதவும் செயற்கை நுண்ணறிவு

25 Apr, 2020 | 06:31 PM
image

மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் ஏராளமான பிரிவுகளில் அறிமுகமாகி நல்ல பலனை அளித்து வருகிறது.

அந்தவகையில் பற்களை செயற்கை முறையில் பொருத்துதலுக்கான சத்திர சிகிச்சையில் தற்போது செயற்கை நுண்ணறிவு அறிமுகமாகியிருக்கிறது.

விபத்தின் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ பற்களை இழப்பவர்களுக்கு, அவற்றின் முக்கியத்துவம் கருதி, மீண்டும் அவ்விடத்தில் பற்கள் பொருத்தப்படுகிறது. இம்ப்ளான்ட் எனப்படும் இத்தகைய சத்திர சிகிச்சையில் இதுவரை எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் போன்றவற்றின் உதவியுடன் பற்கள் பொருத்தப்பட்டது.

பற்கள் பொருத்துவதற்கான சிகிச்சையில் அதிலும் கீழ் மற்றும் மேல் தாடை பகுதியில் சிக்கலான நரம்பு தொகுதிகள் அமைந்திருப்பதால், இதற்கு துல்லியமான அவதானிப்பு அவசியமாகிறது.

அதிலும் பற்களுக்கான மாண்டிபுலர் வேர் பகுதி மற்றும் தாடைப்பகுதியில் அமைந்திருக்கும் அல்வியோலர் நரம்புகளை துல்லியமாக அவதானித்து, பற்களை பொருத்துவதில் தான் இத்தகைய சத்திர சிகிச்சையின் வெற்றி வீதம் அமைந்திருக்கிறது.

இந்நிலையில் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய சத்திரசிகிச்சை தொழில்நுட்பம் மருத்துவ நிபுணர்களுக்கு பாரிய அளவில் உதவுகிறது. இதனால் இம்பிளான்ட் எனப்படும் பற்களின் அளவு, பொருத்தும் இடம் ஆகியவற்றை சரியாக பொருத்த இயலுகிறது.

நோயாளிகளுக்கும் அவர்கள் எதிர்பார்த்த பலன் கிடைப்பதால், பற்களைப் பொருத்துதலுக்கான சத்திர சிகிச்சையில் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய இத்தகைய சத்திரசிகிச்சை தொழில்நுட்பம் வரவேற்பை பெற்றிருக்கிறது.

டொக்டர் பிரசாந்த்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right