இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அங்கு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல், ஊரடங்கு உத்தரவு,  உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்தம் 24,506  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கேரளாவில் 4 மாத குழந்தையொன்று இறந்துள்ளமை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த குழந்தை, கடந்த 17 ஆம் திகதி மூச்சுத்திணறல் காரணமாக, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தது.

அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், குழந்தைக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதியானது.

இந்நிலையில், அவசர சிகிச்சைப்பிரிவில் குழந்தைக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும், குறித்த குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.