வவுனியாவில் அண்மைக்காலமாக கசிப்பு உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த ஈஸ்ட் விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் என வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உறுப்பினர் த. சுஜீவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
வவுனியாவில் கசிப்பு உற்பத்தியை கட்டுப்படுத்த பொலிஸார் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெரும் பிரயத்தனத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும் சமூக விரோத செயற்பாட்டில் ஈடுபடுபவர்கள் இக்காலப்பகுதியில் கசிப்பு உற்பத்தியில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். எனவே கசிப்பு உற்பத்தியை கட்டுப்படுத்த ஈஸ்ட் விற்பனையை வரையறுத்து விற்பனை செய்ய அரச அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே தற்போதைய நிலையில் வெதுப்பகங்களுக்கு மட்டுமே ஈஸ்ட் விற்பனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் வர்த்தக நிலையங்களும் ஈஸ்ட் விற்பனையை ஒரு வரையறைக்குள் விற்பனை செய்து சமூகம் சார்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM