ஒன்றிணைந்த எதிர்கட்சியினரால் நேற்று (24) முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டத்தில் காயமடைந்த ரோஹித அபேகுணவர்தன தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்தியவங்கி ஆளுநரை பதவி விலக்குதல் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்று பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் முன்னெடுத்தது. 

இந்த ஆர்பாட்டத்தில் பொலிஸாரின் தடையை மீறி சென்றபோது ரோஹித அபேகுணவர்தன மற்றும் ஸ்ரீயானி விஜேவிக்ரம ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சிகிச்சைப்பெற்றுவந்த ஸ்ரீயானி விஜேவிக்ரம சிகிச்சைப்பெற்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதுடன், ரோஹித அபேகுணவர்தன தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.