புத்தளம் மாவட்டத்தின் அனைத்து சமுர்த்தி அதிகாரிகளும் தமது சேவையிலிருந்து விலகுவதற்கு தீர்மானம் எடுத்துள்ளனர்.

ஏப்ரல் 22 ஆம் திகதி முதல் சமுர்த்தி அதிகாரிகள் மீதான உடல் ரீதியான தாக்குதல் சம்பவங்கள் காரணமாகவே அவர்கள் இவ்வாறு தமது சேவையிலிருந்து விலகுவதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாக புத்தளம் மாவட்ட சமுர்த்தி அதிகாரிகள் குழுவின் செயலாளர் துஷாரா லோவ் தெரிவித்தார்.

அரசாங்கம் வழங்கிய 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளபோதிலும் இந்த தாக்குதல் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையினால், சமுர்த்தி அதிகாரிகள் இன்றும் நாளையும் தமது சேவையிலிருந்து விலகுவதற்கு முடிவுசெய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.