அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கமைவாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்களுக்கு சமூகமளிக்கும் பொதுமக்களினதும் அரச உத்தியோகத்தர்களினதும் உடல் வெப்பநிலையை அளவிடுவதற்கு விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்டச்  செயலாளர் கலாமதி தெரிவித்தார்.

இதற்கமைய மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்களிலும் பயன்படுத்துவதற்காக வெப்ப அளவீட்டுக் கருவிகள் மாவட்டச் செயலாளரினரினால் நேற்று ( 24.04.2020 ) மாவட்ட செயலகத்தில் வைத்து அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் கொரோனா தொற்று பரவாமலிருக்க சுகாதாரப் பிரிவினரால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களையும் அரசினால் வழங்கப்படும் அறிவறுத்தல்களையும் முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அதை மேற்பார்வை செய்கின்ற பொறுப்பு பிரதேச செயலாளர்களுக்குரியது எனவும் மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.