தொற்றுநோக்கீகளை உற்பத்தி செய்யும் பிரபல நிறுவனமொன்று மனித உடல்களில்  அவற்றை பயன்படுத்தவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

லைசோல் டெட்டோல் போன்றவற்றை தயாரிக்கும் ரெக்கிட் பென்கைசர் என்ற நிறுவனம் இந்த வேண்டுகோளை விடு;த்துள்ளது.

தனது உற்பத்தி பொருட்களை மனிதர்கள் எந்த சூழ்நிலையிலும்,ஊசி மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ உடலிற்குள் செலுத்தக்கூடாது என ரெக்கிட் பென்கைசர் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

எங்கள் தொற்றுநீக்கிகள் மற்றும் சுகாதார பொருட்களை நோக்கம் மற்றும் பயன்பாட்டு வழிகாட்டுதல்களில் குறிப்பிட்டுள்ள படி மாத்திரமே பயன்படுத்தவேண்டும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொற்று நீக்கிகளை வைரசினை கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தலாம் எனஅமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளதை தொடர்ந்தே ரெக்கிட் பென்கைசர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

தொற்றுநீக்கிகளை மனித உடலில் பயன்படுத்தலாம் என்ற அடிப்படையில் டிரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார்.