கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உதவிக்கரம் நீட்டுபவர்களின் பட்டியலில் இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளரான தில்ருவன் பெரேராவும் இணைந்துள்ளார்.
இலங்கையில் கொரோன வைரஸின் பரவல் அதிகரித்து வருவதால், ஒவ்வொரு நாட்டிலுமுள்ள விளையாட்டு வீரர்கள் தத்தமது நாடுகளுக்கு உதவி புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கை கிரிக்கெட்டின் பல்வேறு வீரர்களும் கொவிட்-19 வைரஸுக்கு எதிராகவும் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்த வரிசையில் தில்ருவான் பெரேரா, பாணந்துறை சுகாதார வைத்திய நிலையத்துக்கு செயற்கை சுவாச உபகரணங்களை நேற்று வழங்கியிருந்தார்.
கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வருவதற்காக இலங்கை கிரிக்கெட் சபை 25 மில்லியன் ரூபா வழங்கியிருந்ததோடு, இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன உள்ளிட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் ஹோமாகமை வைத்தியசாலைகளுக்கு நிதி வழங்கியிருந்தனர்.
அதுமாத்திரமின்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொவிட் -19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்துக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரன் ஒரு தொகைப் பணத்தை நன்கொடையாக வழங்கியதுடன், முன்னாள் வீரர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார அடங்கிய குழுவொன்று 6000 உலர் உணவு பொதிகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியிருந்தது.
மேலும், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தாமாக முன்வந்து கொரோனாவுக்கு எதிராக போராடவும் மக்களுக்கு நிவாரண பொதிகளை வழங்குவதற்கான நிதிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM