மாலைதீவில் இலங்கையர் ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மாலைதீவில் இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகளில் இலங்கை ஒருவர் உள்ளடங்குவதை மாலைதீவு சுகாதார பாதுகாப்பு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மாலைதீவில் இன்றையதினம் அடையாளம் காணப்பட்ட 6 தொற்றாளர்களில் மாலைதீவு, பங்களாதேஷைச் சேர்ந்த இருவரும், இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த தலா ஒருவருமாக இனங்காணப்பட்டுள்ளார்கள்.

மாலைதீவில் இதுவரை 116 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள்.

தற்போது நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் மாலைதீவில் சிக்கித் தவிக்கின்றனர், அவர்களை வெளியேற்றுமாறு இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.