பதுளை – மகியங்கனை வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள், வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

கந்தகெட்டிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான டபள்யு. எம். கருணாதிலக்க என்ற 49 வயது நிரம்பிய நபரே விபத்தில் பலியானவராவார்.

பதுளை – மகியங்கனை பிரதான பாதையின் 21 ஆவது மைல் கல்லருகே இன்று (24.04.2020) இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

கந்தகெட்டிய பொலிசார் மேற்படி விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளில் ஏற்பட்ட இயந்திரக் கோளாரே இவ் விபத்துக்கு காரணமென்று பொலிசார் தெரிவித்தனர்.

விபத்தில் பலியான நபரின் சடலம் மீகாகியுல அரசினர் வைத்தியசாலையின் பிரேத அறையில் சட்ட வைத்திய பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.