கடமைக்கு திரும்புகிறார் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன்!

24 Apr, 2020 | 11:42 AM
image

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துவரும் நிலையில் நெருக்கடியான நிலைமையை கட்டுப்படுத்த அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் எதிர்வரும் திங்களன்று கடமைக்கு திரும்பத் திட்டமிட்டுள்ளதாகக் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் மூன்று நாட்களும், வைத்தியசாலையில் ஏழு நாட்களும் சிகிச்சை பெற்று குணமடைந்த போரிஸ் ஜோன்சன் இம் மாத தொடக்கத்தில் வைத்தியசாலையிலிருந்து  வெளியேறினார். பின்னர் செக்கரில் அவரது இல்லத்தில்  ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில் தனது உதவியாளர்களிடம் அடுத்த வாரம் அமைச்சரவை அமைச்சர்களுடன் சந்திப்புகளை ஒழுங்கு செய்யுமாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right