பெற்ற குழந்தையின் முகத்தை ஒருமுறைகூட பார்க்காது கொரோனா வைரஸால் 29 வயது தாய் மரணம்

24 Apr, 2020 | 11:21 AM
image

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் அமைந்துள்ள ஹார்ட்லேண்ட்ஸ் வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான தாய் ஒருவர் குழந்தை பிரசவித்து 6 நாட்களின் பின் மரணமடைந்துள்ளார்.

29 வயதான குறித்த தாய் கர்ப்பிணியாக இருக்கும் போதே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி சத்திரசிகிச்சை மூலம் ஆண் குழந்தையை பிரசவித்துள்ளார்.

ஆனால், குழந்தைக்கு கொரோனா  தொற்று ஏற்பட்டிருக்கவில்லை, இதனையடுத்து குறித்த தாய் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளார்.

எனினும் அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து  தீவிர சிகிச்சை பிரிவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

இந்நிலையில், இரத்த உறைவு உருவாக்கி கோமா நிலைக்குச் சென்றுள்ளார். இதனைடுத்து அவரது கணவரும் தந்தையும் தனிப்பட்ட பாதுகாப்பு உடைகளை அணிந்து அவரை பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 பர்மிங்காம் ஹார்ட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த தாயின் உடல்நிலை காரணமாக,  தனது குழந்தையைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை, இறப்பதற்கு முன் தனது குழந்தையின் புகைப்படங்களை மட்டுமே அவர் பார்த்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடத்தி கொலைசெய்யப்பட்டு முதலைக்கு இரையான வயோதிப...

2022-10-07 10:30:14
news-image

பிரித்தானியாவில் மின்வெட்டு

2022-10-07 10:44:24
news-image

வளர்ப்பு மகனின் விதைகளை நீக்க முயன்ற...

2022-10-07 10:48:22
news-image

தாய்லாந்தில் முன்பள்ளி குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில்...

2022-10-06 15:38:43
news-image

மெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு : மேயர் உள்பட...

2022-10-06 14:01:44
news-image

காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழப்பு ;...

2022-10-06 15:36:32
news-image

பாரத் ராஷ்டிரிய சமிதி என்ற தேசியக்...

2022-10-06 13:27:45
news-image

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக...

2022-10-06 12:55:32
news-image

காங்கிரஸின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் இணைந்த...

2022-10-06 13:27:19
news-image

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: ஈரான் சிறுமியை...

2022-10-05 17:12:16
news-image

இரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர்...

2022-10-05 16:24:29
news-image

இந்தியா - எத்தியோப்பியா ஆகிய நாடுகள்...

2022-10-05 16:36:57