சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள், ஏனைய வியாபாரங்கள் மற்றும் தனிப்பட்டவர்களுக்கு உதவும் முகமாக அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட பணிப்புரைகள் மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் அறவிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில், Covid-19 தொற்றுநோய் பரவலின் விளைவாகத் தோன்றியுள்ள நிதி மற்றும் பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுக்க வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில், அமானா வங்கி விசேட கால அவகாச நிவாரணச் சலுகையை அறிவித்துள்ளது.
இந்த நிவாரணச் சலுகையானது தனிப்பட்ட வாடிக்கையாளர்கள், வியாபார வாடிக்கையாளர்கள் ஆகிய இரு சாராருக்கும் வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் வங்கியின் வலைத்தளம் ஊடாக விண்ணப்பிக்கலாம்.
தனிப்பட்ட வாடிக்கையாளர்கள் bit.ly/AmanaBankMoratorium இல் கிடைக்கும் வலைத்தளப் படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம்; விண்ணப்பிக்க வேண்டும். வியாபார வாடிக்கையாளர்கள் covid19relief@amana.lk என்ற மின்னஞ்சல் ஊடாக விண்ணப்பிப்பதுடன், தத்தமது கிளை முகாமையாளருடன் அல்லது உறவு முகாமையாளருடன் தொடர்புகொள்ள வேண்டும். நிவாரணம் கோரும் சகல வேண்டுகோள்களும் 2020 ஏப்ரல்; 30ஆம் திகதி அல்லது அதற்கு முன் வங்கிக்குக் கிடைக்கும் வகையில் ஆவணப்பபடுத்தல் வேண்டும்.
மேற்படி விசேட நிவாரணத்தைத் தவிர, அமானா வங்கி அதன் தங்க நகை பாதுகாப்பு வசதி; வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் பெற்ற நிதி வசதியை மீளச்செலுத்துவதற்கு மேலதிக கால சலுகை அவகாசத்தையும் வழங்கியுள்ளது. அதாவது, நிதி வசதியை மீளளிப்பதற்கான காலம் 2020 செப்டெம்பர் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்கள் தமது வங்கி நடவடிக்கைகளை அதிக சிரமம் இல்லாமல் தொடர்ந்து மேற்கொள்வதற்கும் அமானா வங்கி ஏற்பாடுகளைச் செய்துள்ளது. சம்பளத்தைக் கிரமமாக வங்கியில் வைப்புச் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சம்பள முற்பணம் வழங்கும் வசதி, இணையத்தள வங்கிச் சேவை வசதி, இணையத்தளத்தின் ஊடாக ஏனைய வங்கிகளுக்குப் பணத்தைப் பரிமாற்றம் செய்யும்போது விதிக்கப்படும் கட்டணத்திலிருந்து விலக்களிப்பு, தற்போதய சூழ்நிலையில் வாடிக்கையாளர்களை அணுகுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Bank on Wheels என்ற நடமாடும் ATM சேவை என்பன இந்த ஏற்பாடுகளுள் அடங்கும்.
வங்கியின் நிவாரண நடவடிக்கைகள் பற்றி பிரதம நிறைவேற்று அதிகாரி மொகமட் அஸ்மீர் கருத்து வெளியிடுகையில், “நிகழும் தற்போதைய இக்கட்டான சூழலில் எமது சகல வாடிக்கையாளர்களினதும் பாதுகாப்பு மற்றும் நிதி நலன்களை உறுதி செய்வதற்கு அமானா வங்கி தன்னாலியன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். மனிதாபிமானத்தை முதன்மையாக கொண்ட தனித்துவமான அணுகுமுறையில் நிவாரணைகளை வழங்குவதன் மூலம் இலங்கை மக்கள் அனைவருக்கும் உதவுவதே எங்கள் நோக்கமாகும்;” என்று கூறினார்கள்;.
இலங்கை மத்திய வங்கியினால் உரிமம் அளிக்கப்பட்ட அமானா வங்கி பி.எல்.சி.; கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட ஒரு தனி நிறுவனமாகும். ஜித்தாவில் தலைமையகத்தைக் கொண்ட IDB குழுமம் பிரதான பங்குதாரர் என்ற முறையில் அமானா வங்கியில் 29.97% பங்குளைக் கொண்டுள்ளது. IDB குழுமம் ‘AAA’ தரப்படுத்தலைப் பெற்ற பல்துறை அபிவிருத்தி சார்ந்த நிதி நிறுவனமாகும்.
இந்த நிறுவனத்தில் 57 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன. ஃபிச் ரேட்டிங்ஸ் அமைப்பு 2019 ஜூன் மாதத்தில் அமானா வங்கியின் டீடீ(டமய) என்ற தேசிய நீண்டகாலத் தரப்படுத்தலையும் சாதகமான கண்ணோட்டத்தையும் ஊர்ஜிதம் செய்தது. ‘OrphanCare’ நம்பிக்கைப் பொறுப்பகத்தைத் தவிர, அமானா வங்கிக்கு அதனைப் பிரதிநிதித்துவம் செய்யும் உப நிறுவனங்கள், துணை நிறுவனங்கள் அல்லது இணை நிறுவனங்கள் எதுவும் கிடையாது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM