(இராஐதுரை ஹஷான்)

வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையினை  மீள கட்டியெழுப்புவதற்கு அனைத்தும் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

யுனெஸ்கோ அமைப்பில் செல்வாக்கு  செலுத்தும் நாடுகளின் அரச தரப்பினருடனான காணொளி் கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.

இக்காணொளி கலந்துரையாடலில் கலந்துக் கொண்ட பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அனைத்து தரப்பினரும் பாரிய சவால்களை எதிர்க்கொண்டுள்ள  நிலையில் அனுபவங்களை ஒவ்வொரு தரப்பினருக்கிடையில் பரிமாற்றிக் கொள்வது மகிழ்வுக்குரியது.

இலங்கையின் தேசிய பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை நேரடி பங்களிப்பு செலுத்துகின்றது. 2018 ஆம் ஆண்டு சுற்றுலாத்துறை அபிவிருத்தி ஊடாக 4 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் கிடைக்கப் பெற்றது.

துரதிர்ஷ்டவசமாக 2019 ஆம் ஆண்டு நாட்டில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதலின் காரணமாக சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்த்து.