மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்  சபையினால் நடத்தப்பட்டு வருகின்ற கரீபியன் பிரீமியர் லீக்கில் (சீ.பி.எல்.) ஜமைக்கா தல்வாஸ் அணிக்காக விளையாடி வந்த நட்சத்திர வீரரான கிறிஸ் கெய்ல், இம்முறை சென். லூசியா சோக்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  

கே.பி.எச்  டி ரீம் கிரிக்கெட்  பிறைவெட்  லிமிட்டெட்  நிறுவனம்  கடந்த பெப்ரவரி மாதம் கரீபியன் பிரீமியர் லீக் தொடர் அணிகளில் ஒன்றான சென். லூசியா அணியை வாங்கியது. இதனைத் தொடர்ந்து அந்த அணியின் பயிற்றுநராக அண்டி பிளவர் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், பிரபல வீரரும் அதிரடித் துடுப்பாட்ட வீரருமான கிறிஸ் கெய்லை சென். லூசியா அணி தெரிவு செய்ததுடன், அவ்வணியின் தலைவராக மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவரும் சகலதுறை வீரருமான டெரன் சமி நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், இந்த வருடத்துக்கான  8 ஆவது கரீபியன் பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 19ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 

எனினும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக போட்டிகள் நடைபெறவுள்ள திகதிகளில் மாற்றம் ஏற்படலாம் என அந்நாட்டு கிரிக்கெட் சபை கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.