சப்ரகமுவ மாகாண தமிழ், சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான பரீட்சைகள் எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி முதல் ஆரம்பமாக உள்ளது. 

சப்ரகமுவவின் அனைத்துப் பாடசாலைகளுக்கும் பொதுவான பரீட்சையாக ஒரே வினாத்தாள்களைக் கொண்டு நடாத்தப்படவுள்ளதாக மாகாண கல்வித் திணைக்களம் தெரிவிக்கின்றது. 

இதேவேளை சப்ரகமுவ மாகாணத்தின் முஸ்லிம் பாடசாலைகளுக்கு தனியானதொரு கால அட்டவணையின் கீழ் பரீட்சைகள் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிப்படுகின்றது. 

ரமழான் நோன்பு காரணமாக முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஜூலை 11 ஆம் திகதியே அப்பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. அதன் பின்னரே இரண்டாம் தவணைப் பரீட்சைகள் ஆரம்பமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதே போல் மண்சரிவு, வெள்ள அனர்த்த நிலைமைகளை கருத்திற்கொண்டு மூன்று நாட்கள் சப்ரகமுவ பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன. 

அதற்குப் பதிலீடாக ஜூலை மாதத்தின் 02, 09, 16 ஆகிய தினங்களில் (சனிக்கிழமை) சப்ரகமுவ மாகாண பாடசாலைகள் நடைபெற உள்ளதாகவும் முஸ்லிம்  பாடசாலைகள் நடைபெறும் நாட்கள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளதாகவும் மாகாண கல்வித் திணைக்களம் தெரிவிக்கின்றது.