தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றிய விஜய் சேதுபதி

23 Apr, 2020 | 03:00 PM
image

தமிழில் வித்தியாசமான நடிகர் என்று பெயரெடுத்தவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.  இவர் சிரஞ்சீவி நடித்த 'சைரா நரசிம்ம ரெட்டி' என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.

அதனைத்தொடர்ந்து சிரஞ்சீவியின் உறவினரான வைஷ்ணவ் தேஜ் கதாநாயகனாக அறிமுகமாகும் 'உப்பென்னா' என்ற படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். படம் வெளியாகும் முன்பே இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி இருக்கிறார் விஜய் சேதுபதி.

இது குறித்து அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரிக்கும் பொழுது, இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும், புகைப்பிடிக்கும் காட்சிகளிலும் நடித்திருப்பதால் இந்தப் படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டால் தன்னுடைய புகழுக்கு பாதகம் ஏற்படும் என்பதால், இதன் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி இருக்கிறார் என்றும், இப்படத்திற்காக பேசப்பட்ட சம்பளத்தை கொடுக்காத படத் தயாரிப்பு நிறுவனம், அதற்கு ஈடாக ரீமேக் உரிமையை கொடுத்திருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள். இந்த தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வேறு ஒரு தயாரிப்பாளருக்கு மாற்றவோ அல்லது வேறு ஒரு தயாரிப்பாளருடன் இணைந்து முதல் பிரதி அடிப்படையில் விஜய்சேதுபதியே தயாரிக்கக் கூடும் என்றும் திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.

இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இந்தியாவின் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்ட் சினிமா, கொமர்ஷல் சினிமா என இரண்டு சினிமாவிலும் ஏககாலத்தில் தன் ஆதிக்கத்தை செலுத்தி, அழுத்தமான முத்திரையை பதித்து வரும் இவர், தமிழைத் தவிர வேறு மொழிகளிலும் கடந்த ஆண்டு முதல் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, விரைவில் முன்னணி பொலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பில் ஹிந்தியிலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதர்ஸ் - திரைப்பட விமர்சனம்

2025-11-07 17:43:23
news-image

புதுமுக நடிகர் மதி நடிக்கும் 'கும்கி...

2025-11-07 17:13:13
news-image

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பராசக்தி' படத்தில் முதல்...

2025-11-07 16:59:16
news-image

சேர்.பொன்.இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தின்...

2025-11-07 16:10:59
news-image

தனுஷ் நடிக்கும் 'தேரே இஷ்க் மே'...

2025-11-07 15:47:19
news-image

சாதனை படைத்து வரும் துல்கர் சல்மான்...

2025-11-07 15:31:25
news-image

இணையத்தை அதிர வைக்கும் பிரபுதேவா பட...

2025-11-07 15:23:24
news-image

டிஜிட்டல் தளங்களிலும் ஆரியன் படத்திற்கு சிறப்பான...

2025-11-07 15:09:59
news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'லஷ்மி காந்தன்...

2025-11-06 16:56:38
news-image

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'தோட்டம் -...

2025-11-06 16:56:26
news-image

செல்ல பிராணியான நாய்களுக்கு பயிற்சி அளிக்கும்...

2025-11-06 16:56:06
news-image

'ஆக்சன் கிங்' அர்ஜுன் - ஐஸ்வர்யா...

2025-11-06 16:55:47