பிரிட்டன் பிரதமர் கமஷரூனை பாதுகாக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சி தோல்வி கண்டுள்ளதோடு கமரூன் பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார் என இன்று சபையில் தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட எம்.பி. தினேஷ் குணவர்தன,

தகவல் அறியும் உரிமைச் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ள நிலையான குழுவொன்று ஏற்படுத்தப்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே தினேஷ் குணவர்தன எம்.பி. இதனை தெரிவித்தார்.