அமெரிக்காாவில் நியூயோர்க் நகரில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் இரண்டு பூனைகளுக்க கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவைகளே அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான முதல் செல்லப்பிராணிகளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பூனைகளுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால் விரைவில் குணமடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பூனைகளுக்கு தங்கள் வீடுகளில் அல்லது சுற்றுப்புறங்களில் உள்ளவர்களிடமிருந்து இந்த வைரஸ் பாதித்ததாக கருதப்படுவதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மத்திய மையங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கு முன்பு ப்ராங்க்ஸ் மிருகக்காட்சிசாலையில் சில புலிகள் மற்றும் சிங்கங்களுக்கு அண்மையில் கொரோனா வைரஸ் இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்ட பிறகு இப்போது பூனைகளுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் உலகெங்கிலும் விலங்குகளும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாவது உறுதியாகி உள்ளது.
சில விலங்குகளுக்கு மக்களிடமிருந்து வைரஸ் பரவுகிறது என்று தோன்றும் போது, செல்லப்பிராணிகளால் மனிதர்களுக்கு வைரஸ் பரவுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று எங்களது சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM