தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் விஜய் கொரோனா தடுப்பு நிவாரணப் பணிகளுக்காக நிதி உதவி அளித்திருக்கிறார்.

கொரோனா வைரஸ்  பரவலை தடுப்பதற்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு தற்போது நடைமுறையில் உள்ளது.

இதனால் அனைத்து துறையினரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து, வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள்.

குறிப்பாக திரைப்பட துறை சார்ந்த அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் வேலைவாய்ப்பு இழந்துள்ள தொழிலாளர்களுக்கு, முன்னணி நட்சத்திரங்கள் நிதி உதவி வழங்கி வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் அளவிற்கு நிதி உதவி வழங்கி இருக்கிறார்.

இதில் தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாயும், பிரதமரின் நிவாரண நிதிக்கு 25 லட்ச ரூபாயும், திரைப்பட தொழிலாளர்கள் சங்கமான பெஃப்சிக்கு 25 லட்ச ரூபாயும் வழங்கியிருக்கிறார்.

கேரள மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு 10 லட்சமும், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் முதல்வர்களின் நிவாரண நிதிக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் என மொத்தம் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய்க்கு நிதி உதவி வழங்கி இருக்கிறார்.

இதை தவிர்த்து தன்னுடைய ரசிகர் மன்றமான மக்கள் இயக்கம் சார்பாக ஏராளமான உதவிகளை தளபதி விஜய்  வழங்கி வருகிறார்.